செய்திகள்

மைக்ரோமேக்ஸ் X1i: நோக்கியா 3310 போன்று காட்சியளிக்கும் மலிவு விலை பீச்சர்போன் அறிமுகம்

Published On 2017-05-23 09:57 IST   |   Update On 2017-05-23 09:58:00 IST
நோக்கியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3310 கடந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மைக்ரோமேக்ஸ் X1i பீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பார்க்க நோக்கியா 3310 போன்றே காட்சியளிப்பதோடு, விலையும் குறைவாக உள்ளது.
புதுடெல்லி:

எச்.எம்.டி. குளோபல் கடந்த வாரம் நோக்கியா 3310 போனினை விற்பனைக்கு வெளியிட்டது. இந்தியாவில் இந்த போன் ரூ.3310 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதே விலைக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. 

நோக்கியா 3310 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் ரூ.3000 பட்ஜெட்டில் 2ஜி கனெக்டிவிட்டி கொண்ட சாதனத்தை வாங்க விரும்ப மாட்டார்கள். கடந்த சில மாதங்களாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட மலிவு விலை பீச்சர் போன் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. 

அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை பீச்சர் போன் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பார்க்க நோக்கியா 3310 போன்றே காட்சியளிக்கும் புதிய பீச்சர் போன் மைக்ரோமேக்ஸ் X1i என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய மைக்ரோமேக்ஸ் X1i போனில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், வி.ஜி.ஏ. கேமரா, 32 எம்பி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 1300 எம்ஏஎச் பேட்டரி, வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ, வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர், ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3310 சிறப்பம்சங்களை பொருத்த வரை  2.4 இன்ச் QVGA 240x320 பிகசல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கிளாசிக் கீபோர்டு சீரிஸ் 30+ இயங்குதளம் மற்றும் 16 எம்பி இன்டெர்னல் மெமரி, மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருப்பதோடு 2 எம்பி பிரைமரி கேமரா, 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மைக்ரோ சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி , 3.5 எம்எம் ஹெட்போன் கனெக்டர் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்நேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

Similar News