செய்திகள்

இந்தியாவில் சியோமி ரெட்மி 4A: மார்ச் 20 வெளியாகும் என தகவல்

Published On 2017-03-17 11:48 GMT   |   Update On 2017-03-17 11:48 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போன் மார்ச் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. சீனாவில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்பட்டது. ரோஸ் கோல்டு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைத்த இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில்  வெளியிடப்பட இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் IPS LCD ஸ்கிரீன் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ரெட்மி 4A 3120 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 



சியோமி நிறுவனத்தின் துணை தலைவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மார்ச் 20 ஆம் தேதி கூடுதலாக புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் கூடுதல் சாதனம் வெளியிடப்படுமா என்பது குறித்து எவ்வித  தகவலும் இல்லை. 

முன்னதாக சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த குறைந்த காலகட்டத்தில் 10 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. விலை உயர்ந்த சாதனங்களில் மட்டும் வழங்கப்படும் அம்சங்கள் கொண்ட சாதனங்களை மிக குறைந்த விலையில் வழங்கி சியோமி இந்தியாவில் பிரபலமானது.

Similar News