செய்திகள்
வைரல் புகைப்படம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனால்... விஷம தகவலுடன் வைரலாகும் புகைப்படம்

Published On 2021-08-20 05:29 GMT   |   Update On 2021-08-20 05:41 GMT
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளில் இந்த திட்டத்தின் கீழ் வெவ்வேறு சாதியை சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் ஆர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதோடு இந்த திட்டத்திற்கு எதிரான கருத்துக்களும் வலைதளங்களில் தொடர்ந்து வலம்வந்து கொண்டிருக்கின்றன.



இந்த நிலையில், "கார் பைக்  கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான் நடக்கும்...!!!" எனும் தலைப்புடன் அர்ச்சகர் ஒருவர் கோவிலை பைப் தண்ணீரால் சுத்தம் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளிடையே பலர், இந்தியாவின் பிற மாநில கோவில்களின் அர்ச்சகர்கள் சிலைகள், கொடி மரத்தின் மீது தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது ஜூலை 3 ஆம் தேதி தினத்தந்தி செய்தியில் வெளியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த புகைப்படம் "தண்டுமாரியம்மன் கோவிலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்" என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டம் நிறைவேற்றுவதற்கு முன்னரே கோயில் சுத்தம் செய்யப்பட்ட போது எடுத்தப் படம் அது. அந்த வகையில் வைரல் புகைப்படம், தமிழகத்தில் நிறைவேறி இருக்கும் புது திட்டத்திற்குப் பின் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.
Tags:    

Similar News