செய்திகள்
ஐக்கிய நாடுகள் லோகோ

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - இந்தியா பற்றி வைரலாகும் தகவல்

Published On 2021-08-09 05:25 GMT   |   Update On 2021-08-09 05:25 GMT
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா முதல் முறையாக தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது. இதையொட்டி ஐக்கிய நாடுகள் கவுன்சிலில் இப்போது தான் இந்தியா முதல் முறையாக தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறது என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா எட்டாவது முறையாக இடம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த கவுன்சிலின் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் மாற்றப்பட்டு வருகிறது.

ஐத்திய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன. ஐ.நா. பொதுக்குழு சர்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் பத்து தற்காலிக உறுப்பினர்கள் கவுன்சிலில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2021-22 ஆண்டுகளுக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா சேர்க்கப்பட்டது. 



முன்னதாக 1950-51, 1967-68, 1977-78, 1984-85, 1991-92 மற்றும் 2011-12 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பு ஒவ்வொரு மாதத்திற்கும் அதன் உறுப்பினர்களால் ஏற்கப்பட்டு வருகிறது.

தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை பிரான்சிடம் இருந்து இந்தியா ஏற்று இருக்கிறது. செப்டம்பர் மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஐயர்லாந்து ஏற்க இருக்கிறது. மீண்டும் டிசம்பர் 2022 மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News