செய்திகள்
கைப்பற்றப்பட்ட பணம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

பென்னாகரம் அருகே இன்று வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-02 17:24 IST   |   Update On 2019-04-02 17:24:00 IST
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இன்று வாகன சோதனையின் போது உரிய ஆவணமில்லாததால் ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே தேர்தல் அதிகாரி மனோகரன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து கார் ஒன்று வந்தது. அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்தவர் கேரளாவை சேர்ந்த மகபூப் ஆஷா என்பதும், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சத்து 5ஆயிரத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் மகபூப் ஆஷாவிடம் தெரிவித்தனர்.

Similar News