செய்திகள்
மதுராந்தகம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
ஈசூர், புதுர், தச்சூர்வீராணம், குன்னம், குமாரவாடி, முகையூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருக்கு மதுராந்தகம் ஒன்றிய கிராமங்களில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றியசெயலாளர் அப்பாதுரை, பா.ம.க. பொன்.கங்காதரன், கோபாலகண்ணன், தேமுதிக ராஜேந்திரன், பா.ஜ.க செந்தழிழ்அரசு, பாலாஜி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #LokSabhaElections2019