செய்திகள்
இந்துக்களுக்கு நான் எதிரி இல்லை- மு.க.ஸ்டாலின் பிரசாரம்
அரக்கோணத்தில் உள்ள சோளிங்கரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்துக்களுக்கு நான் எதிரி இல்லை என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரக்கோணம் பாண்டிய நல்லூரில் உள்ள சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பேசியதாவது:
அரக்கோணத்திலே நமது கழக வேட்பாளர், அசோகனை எதிர்த்து அதிமுகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் பாமக வேட்பாளர் போட்டியிடவுள்ளார். அதிமுக - பாமக சேர்ந்ததில் ஆச்சரியத்திற்கு இடமில்லை. பாமக தலைவர் டாக்டர். ராமதாஸ் குறித்து உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. தமிழக சட்டப்பேரவையிலே ஜெயலலிதாவின் படம் வைக்கக்கூடாது எனவும், அவர் மக்களுக்கு நன்மை செய்துள்ளாரா? என கேள்வியும் எழுப்பியவர்.
வன்னியர் சங்க சொத்துக்கள் முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்கவே, பாமக- அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். திமுகவை ஏளனம் செய்யும் தகுதி பாமகவிற்கு இல்லை.
அவர்கள் கூறிவருவதை போல், சாதாரணமாக நான் தலைவர் ஆகவில்லை. 50 ஆண்டுகள் கழகத்திற்காக உழைத்துள்ளேன். மேலும் நான் இந்துக்களுக்கு விரோதி என கூறிவருகின்றனர். என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒரு போதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரியும் இல்லை. என்னை குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.
இன்று திமுக ஆட்சி ஒரு வன்முறை ஆட்சி என கூறும் பாமகவினர் தான், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என நான் கூறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

அப்படி இருக்கையில் இன்று, கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இதிலிருந்தே பேரத்தின் அடிப்படையில் தான் இந்த கூட்டணி என தெரிகிறது. மேலும் அதிமுக மோடியின் பினாமி அரசு. எடப்பாடி ஆட்சியின் திட்டங்களை விளக்க தயாரா? எனவும், மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதால், நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் மிக மோசமாக விமர்சித்தார்.