செய்திகள்

ராமதாசை நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன்- திருமாவளவன் பதிலடி

Published On 2019-03-29 15:44 IST   |   Update On 2019-03-29 15:44:00 IST
திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான் தான் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அவரை அறிமுகம் செய்தது நான் தான் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ramadoss #thirumavalavan

அரியலூர்:

திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான் தான் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அவரை அறிமுகம் செய்தது நான் தான் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அரியலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர் கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அ.தி.மு.க. பணத்தை இந்த தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணி பேரம் பேசி அமையவில்லை. அ.தி.மு.க. கூட்டணி பாவத்தை சுமக்கும் கூட்டணி. நாட்டை காப்பாற்ற தி.மு.க. தலைமை தேவை என்பதை கருத்தில் கொண்டு அமைந்தது.

தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து அதை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும்.


ராமதாஸ் அரசியலை சொல்லி தரமாட்டார். பா. ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தேசத்தை காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும். என்னை அறிமுகம் செய்து வைத்ததாக ராமதாஸ் கூறுகிறார். அவரை நான்தான் மேலூரில் அறிமுகம் செய்து வைத்தேன்.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களை ராமதாஸ் இதுவரை பார்க்க வில்லை. கருணாநிதிதான் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ramadoss #thirumavalavan

Tags:    

Similar News