உள்ளூர் செய்திகள்

கட்டிலில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு- போலீஸ் விசாரணை

Published On 2023-02-23 19:12 IST   |   Update On 2023-02-23 19:12:00 IST
  • மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
  • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தம்பாக்கம் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது24) ஆவார். இந்த வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு வாலிபர் மகேஷ் பரிதாபமாக பலியானார்.

இந்தச் சம்பவம் குறித்து மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News