உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தவர் திடீர் உயிரிழப்பு- அழைத்து வந்தவர்கள் தப்பி ஓட்டம்

Published On 2022-08-18 10:25 GMT   |   Update On 2022-08-18 10:25 GMT
  • வாலிபர் ஒருவரை சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் அழைத்து வந்தனர்.
  • வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் அழைத்து வந்தனர்.

வாலிபரை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே சிகிச்சைக்காக வந்தவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் பிடிபட்டால் தான் ஆஸ்பத்திரியில் இறந்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் காயம் அடைந்தாரா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News