உள்ளூர் செய்திகள்

திருப்பனந்தாளில், இளைஞர் திறன் விழா

Published On 2022-12-02 09:59 GMT   |   Update On 2022-12-02 09:59 GMT
  • சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • ஜவுளி, வங்கி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ- மாணவிகளின் தேர்வு.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க.அண்ணாதுரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இளைஞர் திறன் விழாவில் தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் துவங்க வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

பயிற்சி முடிவில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த சான்றிதழை கொண்டு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கலாம்.

இதில் மோட்டார் வாகனம், ஆடை, ஜவுளி, வங்கி மற்றும் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ மாணவிகளின் தேர்வு நடைபெற்றது.

இலவச பயிற்சியில் பங்கு பெறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது சான்றிதழ்களுடன் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வருகை தந்தனர்.

தொடர்ந்து திறன் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News