உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிபட்டி அருகே பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் சாவு

Published On 2023-09-11 17:23 IST   |   Update On 2023-09-11 17:23:00 IST
  • பாப்பிரெட்டிபட்டி அருகே பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • சாமியாபுரம் கூட்ரோடு வரை உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் இறக்கி விட்டு திரும்பி வீட்டிற்கு வலசையூர் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புக்கரெட்டிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (வயது27).

இவர் கடந்த 9-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் கோடீஸ்வரி என்பவரை பின்னால் உட்கார வைத்து சாமியாபுரம் கூட்ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டார். பின்னர் விஜய் அங்கிருந்து மீண்டும் வலசையூருக்கு சென்றபோது, வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வழியில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜய் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News