உள்ளூர் செய்திகள்
- கள்ளுகடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வரும்போது லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது.
- வேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் வேலு (வயது32). கூலித்தொழிலாளியான இவர் நேற்று தோட்டவேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவர் காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் உள்ள கள்ளுகடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வரும்போது லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகலவறிந்து காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.