உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடக்கும் வெங்கடேசன்.

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

Published On 2023-08-01 14:58 IST   |   Update On 2023-08-01 14:58:00 IST
  • தருமபுரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
  • வெங்கடேசனின் தலை பகுதியில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் வெங்கடேசன் (வயது31). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் வெண்ணாம்பட்டியில் உள்ள ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

இவரது தந்தை அண்ணாதுரை தருமபுரியில் தனியார் டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

வெங்கடேசன் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது தந்தையின் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு சென்று சுத்தம் செய்து விட்டு அதன்பிறகு அவர் வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை தனது வீட்டில் இருந்து வெங்கடேசன் தந்தையின் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றபோது வெண்ணாம்பட்டி ரெயில் கேட்டை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக பெங்களூரு-எர்ணாகுளம் ரெயில் வருவதை தெரியாமல் அஜாக்கி ரதையாக அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால், ரெயில் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தருமபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News