விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
வேடசந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம்
- திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது.
- இதில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பலர் கலந்து கொண்டனர்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முப்பெரும் விழா நடந்தது.
இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கலந்துகொண்டு வேடசந்தூர் ஆத்துமேட்டில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர்.
இதில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் தனியார் மகாலில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் பதவியேற்பு விழா நடந்தது.
இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சதீஷ்குமார், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணிவண்ணன், நத்தம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுடர்வண்ணன், இளைஞர் காங்கிரஸ் வேடசந்தூர் தொகுதி தலைவர் ஏர்ஷாத் அகமது, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரத்தினவேலு நன்றி கூறினார்.