உள்ளூர் செய்திகள்
சிவகிரியில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
- முருகன் உடல்நலக்குறைவு தொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- பெற்றோர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டதால், முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
சிவகிரி:
சிவகிரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கனியப்பன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது 2-வது மகன் முருகன்(வயது 30). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவு தொடர்பாக நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று அவரது பெற்றோர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டதால், முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முருகன் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.