உள்ளூர் செய்திகள்
காணாமல் போன ஆட்டுக்குட்டியை தேடிச் சென்ற சிறுமி பலாத்காரம்- வாலிபர் கைது
- கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு
- திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்
திருத்தணி:
திருத்தணி அடுத்த தாமனேரி கிராமம், ரங்காபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆதிவராதபுரம் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பஞ்சாட்சரம் கத்தியை காட்டி மிரட்டி அந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சாட்சரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.