உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
- கோவிலில் வாலிபர் ஒருவர் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருடிக் கொண்டிருந்தார்
- பொதுமக்கள் பார்த்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்
சேலம்
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை, இந்த கோவிலில் வாலிபர் ஒருவர் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தியதில், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பதும், இவர் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ரூம் பாயாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.மேலும் நேற்று இரவு மது அருந்திய ஆனந்த், போதையில் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த பணத்தை கைப்பற்றினர். பகல் நேரத்தில் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.