உள்ளூர் செய்திகள்
ஏலச்சீட்டு நிறுவனத்தில் வேலைபார்த்த போது ரூ.4¾ கோடியுடன் தலைமறைவான வாலிபர் கைது- நான்கு ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்
- வழக்கு விசாரணை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
- கார்த்திக் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி, தண்டபாணி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
அப்போது, கார்த்திக் ரூ.4 கோடியே 75 லட்சத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கார்த்திக் போலீசாரிடம் சிக்கவில்லை.
இதற்கிடையே இது தொடர்பான வழக்கு விசாரணை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் கார்த்திக் ஆஜராகாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது.
இந்நிலையில் 4 ஆண்டுக்கு பிறகு கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.