உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே கைக்குழந்தையுடன் இளம் பெண் மாயம்

Published On 2023-04-30 10:35 IST   |   Update On 2023-04-30 10:35:00 IST
  • இவர் தனது குடும்பத்துடன் வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
  • வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி:

தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் எழில் மனைவி ரஞ்சனி(24). இவர்கள் மகன் பிரனித்ராஜ்(6). எழில் பெங்களூரில் என்ஜீயனராக பணிபுரிந்து வருகிறார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ரஞ்சனி தனது குழந்தையுடன் சொந்தஊருக்கு வந்தார். அவரை அருகில் இருந்து கவனித்து வந்தநிலையில் மகனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்காளம் மாநிலம் பரதமன் மாவட்டம் பரகாச்சியை சேர்ந்தவர் ஸ்ரீபாஸ்தாஸ். இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதியில் உள்ள வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆற்றங்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீபாஸ்தாசின் மகள் ஸ்ரேயாதாஸ் திடீரென மாயமானார். அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா என தெரியவில்லை. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையி னருக்கும் தகவல் தெரிவித்து அவர்கள் வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News