உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை
- வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் ராஜ்குமார் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி திவ்யா (21). இருவருக்கும் வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் ராஜ்குமார் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.