உள்ளூர் செய்திகள்
முத்துச்செல்வன்
திண்டுக்கல் அருகே வாலிபர் தற்கொலை
- குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள குரும்பபட்டி இந்திராநகரை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துச்செல்வன்(24).
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அவரை அழைத்தும் வராததால் வேதனையில் இருந்த முத்துச்செல்வன் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்ெகாம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.