உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்தவருக்கு கத்திக்குத்து

Published On 2022-06-21 11:47 IST   |   Update On 2022-06-21 11:47:00 IST
  • தேனி அருகே மதுகுடிக்க பணம் தராதவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • போதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

தேனி:

தேனி அல்லிநகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டியன்(40). இவரது உறவினர் முருகன். இவர்கள் கூலிவேலை பார்த்து வருகின்றனர்.

தினமும் மதுகுடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக பாண்டியன் மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிட்டார். சம்பவத்தன்று முருகன் வலுக்கட்டாயமாக மது குடிக்கவருமாறு கேட்டுள்ளார்.

அவர் வர மறுக்கவே தனக்காவது பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பணமும் தர முடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் கத்தி மற்றும் கண்ணாடி டம்ளரால் பாண்டியனை தாக்கினார். படுகாமயடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News