உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கம்பத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

Published On 2022-11-10 06:24 GMT   |   Update On 2022-11-10 06:24 GMT
  • படியில் நின்று இடையூறு ஏற்படுத்தியவரை தட்டி கேட்டதால் கண்டக்டரை வாலிபர் சரமாரியாக தாக்கினார்.
  • கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தேனி அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்ட ராக வேலைபார்த்து வருகிறார். நேற்று குமுளி யில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். கம்பம் சிக்னல் அருகே பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது கூடலூர் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த வசந்த்(25) என்பவர் படியில் நின்று இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். அவரை பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் அழைத்துள்ளார். ஆனால் வரமறுத்ததுடன் ஆத்திரமடைந்த வசந்த், கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வசந்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News