உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த கணவன்- மனைவியை படத்தில் காணலாம். 

தவறான அறுவை சிகிச்சை செய்த கடலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது விசாரணை நடத்த வேண்டும் கணவன்- மனைவி கலெக்டரிடம் புகார் மனு

Published On 2022-10-31 14:07 IST   |   Update On 2022-10-31 14:07:00 IST
  • பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
  • பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி நிற்காமல் இருந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக நள்ளிரவில் அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று காலை கைக்குழந்தையுடன் கணவன், மனைவி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது -பண்ருட்டி சிறுவத்தூர் சேர்ந்தவர் வெங்கடேசன். எனது மனைவி பத்மாவதி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது‌. பின்னர் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி எனது மனைவி பத்மாவதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் எனது மனைவி பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் பத்மாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி நிற்காமல் இருந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக நள்ளிரவில் அனுப்பி வைத்தனர்.பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் எனது மனைவி பத்மாவதியை முழு சோதனை செய்து பார்த்த போது குடல் பகுதியையும் வயிற்றையும் ஒன்றாக வைத்து மருத்துவர்கள் தவறான சிகிச்சை செய்தது கண்டுபிடித்ததாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்த போது கடும் அதிர்ச்சி அடைந்தோம்.

பின்னர் உடனடியாக ஜிப்மர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தினர். ஆகையால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News