உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் உலக பழங்குடியினர் தினம் கொண்டாட்டம்

Published On 2022-08-11 15:28 IST   |   Update On 2022-08-11 15:28:00 IST
  • கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
  • விழாவில் பங்ேகற்ற அனைவருக்கும் பாரம்பரிய உணவான தினை பாயாசம் வழங்கப்பட்டது.

அரவேணு

கோத்தகிரி அடுத்த கரிக்கையூரில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் சர்வதேச பழங்குடியின தினத்தை பற்றிய சிறப்புகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் பற்றி எடுத்துரைக்க பட்டது. மேலும் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுமுறை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவ, மாணவிகள், ஊர் மக்களின் கலாச்சார நடனம், நாடகம், கலை நிகழ்சிகள் நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் பங்ேகற்ற அனைவருக்கும் பாரம்பரிய உணவான தினை பாயாசம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

இதில் யு.என்.சி.எஸ். கள அலுவலர், பொறியாளர், கணக்காளர், கிராம வளர்ச்சி அலுவலர்கள், இருளர் நல சங்க செயலாளர், ஊர் தலைவர்கள், தலைமை ஆசிரியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News