உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.

உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-20 14:12 IST   |   Update On 2022-11-20 14:12:00 IST
  • கோணகப்பாடி ஊராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளிசதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

தாரமங்கலம்:

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணகப்பாடி ஊராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளிசதீஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக துணைச்செயலாளர் சதீஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாயினி, அத்திகட்டானுர் அரசு தொடக்க பள்ளி தலைமைஆசிரியர் சாந்தி, நிரஞ்சனா, வார்டு உறுப்பினர்கள் சவிதா, லோகேஸ்வரி சின்னுசாமி, மேகலாதயாளன், செல்வி மாதேஷ், மணி மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற அலுவலத்தில் இருந்து ெதாடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளி வளாகத்தில் நிறைவு அடைந்தது.

Tags:    

Similar News