உள்ளூர் செய்திகள்

உலக தாய்ப்பால் வாரவிழா: டாக்டர்கள், கர்ப்பிணி பெண்கள் உறுதிமொழி ஏற்பு

Published On 2023-08-02 18:23 IST   |   Update On 2023-08-02 18:23:00 IST
  • 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், மருத்துவ பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
  • தொடர்ந்து வரும் 7ம் தேதிவரை பெண்களுக்காக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மாமல்லபுரம்:

சதுரங்கபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மகப்பேறு பிரிவில், உலக "தாய்ப்பால் வாரவிழா" டாக்டர் கவிதா, கௌதமன் தலைமையில் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், மருத்துவ பணியாளர்கள் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து வரும் 7ம் தேதிவரை மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள பால்வாடி, சுகாதார மையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கர்ப்பிணி பெண்களுக்காக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இரா.பகவதி தெரிவித்தார்.

Similar News