உள்ளூர் செய்திகள்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா

Published On 2022-08-06 07:50 GMT   |   Update On 2022-08-06 07:50 GMT
  • உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • பிரசவமான சுமார் 150 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடரும், குழந்தைகளுக்கு 2 செட் உடை மற்றும் நேப்கின்களும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரசவமான சுமார் 150 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடரும், குழந்தைகளுக்கு 2 செட் உடை மற்றும் நேப்கின்களும் வழங்கப்பட்டது.

இந்திய மருத்துவச் சங்கம் திண்டுக்கல் கிளை, பெண் மருத்துவர் பிரிவு மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் இணை இயக்குநரும், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தலைவருமான அமலாதேவி தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.

இந்திய மருத்துவச் சங்கத்தலைவர் மகாலட்சுமி, செயலாளர் கிறிஸ்டோபர்பாபு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி நிலைய மருத்துவர் ராஜாரசூல், குழந்தை நல மருத்துவர் மாலா , மகப்பேறு மருத்துவ சங்க செயலாளர் விஜயா, பொருளாளர் செல்வராணி மற்றும் பெல்லா பிரிமியர் ஹைஜீனிக் புராடக்ஸ் விற்பனை பிரிவு மேலாளர் பெனின்ரை, திண்டுக்கல் லயன்ஸ் சங்க பொருளாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகப்பேறு துறை தலைவர் கீதா செய்திருந்தார்.

Tags:    

Similar News