- பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து மொபட் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிைரவரை தேடிவருகின்றனர்.
தருமபுரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50).
இந்த நிலையில் சேகர் தனது மொபட்டில் தனது மகள் சிவகாமி (27), அவரது மகன் கனீஷ் (5),மகள் மோனீஷ் (5) ஆகியோருடன் பாலக்கோட்டிற்கு வந்தார்.
அப்போது ராயக்கோட்டை-பாலக்கோடு சாலையில் உள்ள பெரியதப்பை அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தில் காயமடைந்த சிவகாமி, கனீஷ், மோனீஷ் ஆகிய 3 பேரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிைரவரை தேடிவருகின்றனர். மகள் கண்முன்னே தந்தை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.