உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
சின்னமனூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- தோட்ட வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே சீலையம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது45). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதி கூலி வேலை செய்து வந்தனர்.
தோட்ட வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.