உள்ளூர் செய்திகள்
- தேவராஜூக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளனார்.
- தேவராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை அருகே பெத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது55). கூலித்தொழிலாளியான இவர் புதுச்சேரியில் பூக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தேவராஜூக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளனார்.
இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் பலனில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் கடந்த 9-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் தினேஷ் மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.