உள்ளூர் செய்திகள்
பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு- தொழிலாளி கைது
- காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன்.
- மர்ம நபர் திடீரென சியாமளா மீது மிளகாய் பொடியை தூவினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி சியாமளா. இவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் திடீரென சியாமளா மீது மிளகாய் பொடியை தூவினார். இதில் சியாமளா நிலைகுலைந்தபோது அவர் அணிந்து இருந்த செயின், மோதிரம், வளையலை பறித்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ராஜன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.