கோவையில் செல்போனை திருடிய தொழிலாளி கைது
- கார்த்திகேயன் தொன்னம்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகே இறக்கி விடுமாறு கூறினார்.
- 2 பேரும் போதையில் அங்கேயே படுத்து தூங்கினர்.
ேகாவை,
சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் ஓதிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38) என்பவர் தன்னை தொன்னம்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகே இறக்கி விடுமாறு கூறினார். இதனையடுத்து அவரை கார்த்திக் தனது மொபட்டில் ஏற்றி சென்றார்.
இறக்கி விட்ட பின்னர் 2 பேரும் போதையில் அங்கேயே படுத்து தூங்கினர். அப்போது கார்த்திகேயன், கார்த்திக்கின் மொபட், செல்போன் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றார். போதை தெளிந்து கண்விழித்த கார்த்திக் ெமாபட் மற்றும் செல்போன் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட், செல்போனை திருடிச் சென்ற கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.