உள்ளூர் செய்திகள்

காலை உணவு தரத்தினை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணி - கலெக்டர் ஆய்வு

Published On 2023-09-06 06:46 GMT   |   Update On 2023-09-06 06:46 GMT
  • புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
  • காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டு தெரிவித்த தாவது:-

திண்டுக்கல் மாவட்ட த்தில் இத்திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ, மாணவி களுக்கும் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவி கள் பயனடைந்து வருகின்ற னர்.

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியினை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். அறைகளில் அமர வைத்து உணவு வழங்க வேண்டும். உணவு வழங்குவதற்கு முன்னர் சாப்பாடு தட்டுகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் தட்டுகள் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். அதேபோல் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக கழுவி பயன்படுத்திட வேண்டும். தண்ணீர் வசதி, சுற்றுப்புற தூய்மையை பராமரிக்க வேண்டும்.

காலை உணவு தயாரிக்கு ம்போது, அரசு அறிவுறுத்தி யுள்ள வழிமுறைகளை பின்பற்றி சத்தான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்து, பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News