உள்ளூர் செய்திகள்

குற்றாலம் அருவி பகுதிகளில் குவிந்த பெண்களை படத்தில் காணலாம்

சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலம் மெயினருவியில் குவிந்த பெண்கள்

Published On 2022-12-12 09:21 GMT   |   Update On 2022-12-12 09:21 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்
  • கார்த்திகை மாதம் முழுவதும் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் கடைபிடிக்கப்படுகிறது

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகை மாதம் முழுவதும் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று 4-வது சோமவாரம் என்பதால் குற்றாலம் மெயின் அருவியில் இரவு 12 மணி முதல் பெண்கள் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதிகாலை முதலே குற்றாலம் பகுதியில் கட்டுக்கடங்காத பெண்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் குற்றாலநாதர் கோவில் முன்பு இருந்த பூக்கடைகளில் பூக்கள், தேங்காய், பழங்கள், சூடம் வாங்கி சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News