உள்ளூர் செய்திகள்

காரைக்கால் மண்டபத்தூரில் 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

Published On 2023-02-18 14:27 IST   |   Update On 2023-02-18 14:27:00 IST
  • இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார்..
  • அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.,

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரைச்சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ல் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச்சேர்ந்த ஜெயபால் மகள் அபிநயாவை (28) இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாகப்பட்டினம் செல்வதாக கூறி, 2 குழந்தைகளோடு வெளியில் சென்ற அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து, சவுந்தரராஜ் அபிநயா வீட்டில் கேட்டபோது இங்கு வரவில்லையென கூறியுள்ளனர். கடந்த 2 வாரமாக பல்வேறு உறவினர்கள் வீட்டில் தேடியும் அபிநயா கிடைக்காதததால், சவுந்தரராஜ், காரைக்கால் கோட்டுச்சேரி செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயா மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News