உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல்லில் கொடுத்த பணம் வராததால் பெண் தற்கொலை

Published On 2022-08-30 13:39 IST   |   Update On 2022-08-30 13:39:00 IST
  • திண்டுக்கல்லில் கொடுத்த பணம் வராததால் பெண் தற்கொலை செய்துகொண்டார்
  • பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது, அதனை இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

திண்டுக்கல்:

தாடிக்கொம்பு அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி பவானி (வயது 43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் உள்ளனர்.

கணவர் இறந்து விட்டதால் பவனி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தனது சகோதரி மகள் சரண்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.50000 கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது, அதனை இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று காளிமுத்து பிள்ளை சந்தில் உள்ள சரண்யா வீட்டுக்கு பணத்தை கேட்க பவானி சென்றார். அங்கு அவர் இல்லாததால் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News