சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நகை, பணம் திருடிய பெண் கைது
- சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- தந்தைக்கு உதவியாக நதியா உடன் இருந்துள்ளார்.
சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி நதியா (வயது 33).
திருட்டு
இவரின் தந்தை கலியன் உடல் நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தந்தைக்கு உதவியாக நதியா உடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவர், நதியாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் நதியாவின் கவனத்தை திசை திருப்பி, அவரது பேக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
பெண் கைது
இதுகுறித்து நதியா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், 1 1/2 பவுன் சங்கிலி, ரூ.11,000 பணம் ஆகியவற்றுடன் பேக் மாயமானதாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நதியாவின் பேக்கை திருடிய ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குண்டு மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கவுசல்யாவை கைது செய்து செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில், கவுசல்யாவின் பேத்தி உடல்நலக் குறைவால் நதியாவின் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் அனும திக்கப்பட்டு இருந்தார்.
அப்போது, நதியாவின் பேக்கை திருடியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.