உள்ளூர் செய்திகள்
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த பெண் கைது
- கிருஷ்ணகிரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
- தலா ஒருவருக்கு ரூ.11,000 வீதம் பணம் வாங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(28).இவர் கன்னியாகுமாரியில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி அமுது. இவர் தீபாவளி ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார் . அதில் பல வகையான பொருட்கள் மற்றும் நகை தருவதாக கூறி 48 பேரிடம், தலா ஒருவருக்கு ரூ.11,000 வீதம் பணம் வாங்கியுள்ளார்.
பணத்தை பெற்ற பிறகு நகை, மளிகைப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பித்த ராமல் ஏமாற்றிவிட்டு தலை மறைவாகி விட்டார். இது குறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செ்ய்து அமுதுவை கைது செய்தனர்.