உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்.

சாலை அமைத்த 3 மாதங்களிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

Published On 2023-06-27 09:41 GMT   |   Update On 2023-06-27 09:41 GMT
  • மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
  • தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

அரூர், 

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம், அரூர் நகரில் இருந்து சிட்லிங், நரிப்பள்ளி, கோட்டப் பட்டி, தீர்த்த மலை, பையர்நாயக்கன் பட்டி, செல்லம்பட்டி, வேப்பம்பட்டி, வேடகட்ட மடுவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக கார்கள்,சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் இந்த சாலையில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் பல வருடங்களாக குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பலமுறை கோரிக்கை விடப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சிமெண்ட் சாலை அமைத்து 3 மாதங்களே ஆன நிலையில் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.

நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் குறைந்த காலத்திலேயே சேதமடைந்துள்ளது.

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News