உள்ளூர் செய்திகள்

போதிய இருக்கை வசதி இல்லாத பஸ் நிலையம்.

தென்காசி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு கூடுதல் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

Published On 2023-03-11 13:48 IST   |   Update On 2023-03-11 13:48:00 IST
  • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
  • பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இருக்கையின்றி நின்று கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருச்சி, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டு மின்றி அண்டை மாநில மான கேரளா விற்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கேரளா பகுதிக ளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தினுள் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் கேரளாவிற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இருக்கையின்றி நின்று கொண்டே இருக்கும் சூழ்நிலை மற்றும் அருகில் இருக்கும் மற்ற சுவர்களில் வயது முதிர்ந்தவர்கள் ஏறி அமரும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அதிலும் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவசரத் திற்கு அவர்கள் தரையில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக் கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி கேரளா செல்லும் பஸ்கள் இயக்கப்படும் பகுதியில் கூடுதல் அமரும் இருக்கைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News