பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்
- ரூ.410 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயை பாதுகாப்பாக மண்ணில் புதைக்க வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டத்தில் மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரூர் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தருமபுரி யிலிருந்து திருவண்ணாமலை வரை ரூ.410 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனையடுதுத எச்.அக்ரஹாரம் அருகே உள்ள சுண்டாங்கிபட்டி சேவாகிராம சுற்று வட்டார பகுதிகளிலும் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளின் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
அரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்படுத்த குழாய் சாலை விரிவாக்க பணியின் போது அகலப்படுத்துவதற்காக திறந்த நிலையில் விடப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இது குறித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார வளர்ச்சி துறையினர் முறையாக கண்காணிப்பு மேற்கொண்டு குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். திறந்தவெளியில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் பாதுகாப்பாக மண்ணில் புதைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.