உள்ளூர் செய்திகள்

காட்டு பன்றிகளால் சேதமடைந்த நெற்கதிர்களை வேதனையுடன் காட்டும் விவசாயிகள்.

குறுவை நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-09-11 08:14 GMT   |   Update On 2022-09-11 08:14 GMT
  • உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது
  • காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்டு தற்போது 35 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது.

இருந்தாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சை அருகே உள்ள தென்னங்குடி, மனத்திடல், விழுதியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே எலி, மயில் ஆகியவை உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது ‌‌விவசாயிகளை வேதனை அடைய செய்து ள்ளது.

தென்னங்குடி கிராமத்தில் வெண்ணாற்றின் கரையோ ரம் 50 ஏக்கரில் இன்னும் இரு வாரத்தில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட உள்ளது.

ஆனால் தற்போது இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதேபோல் மனத்திடல் கிராமத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளால் நெல் வயல்கள் சேதுமடைந்து வருகின்றன ‌‌‌‌.

ஏற்கனவே பல்வேறு இயற்கை இடர்பாடுகள் போன்ற சிரமங்களுக்கு இடையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறுவடை நேர த்தில் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து சேதப்ப டுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது :-

இரவு நேரத்தில் மட்டுமே காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

பல நாட்களாக நாங்கள் வயலில் இரவு நேரத்தில் காவல் காத்தாலும் அசந்து தூங்கும் நேரத்தில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து விடுகின்றனநாங்கள் பட்டாசு வெடித்தாலும் காட்டு பன்றிகள் போவ தில்லை.

அதே நேரத்தில் தாக்கும் முயலும் போது பதிலுக்கு காட்டு பன்றிகளும் தாக்க வருகின்றன.

காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தா விட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

எனவே போர்க்கால அடிப்படையில் காட்டுக் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News