உள்ளூர் செய்திகள்
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த மனைவி
- இந்த சம்பவத்திற்கு பிறகு கணவர் இறப்பிற்கு தான் காரணம் என நினைத்த மீனா மன நிலை பாதிப்படைந்தார்.
- வீட்டில் இருந்த பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மீனா தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பூனாத்தன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மீனா (வயது36). இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.
கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த மாதம் கோவிந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கணவர் இறப்பிற்கு தான் காரணம் என நினைத்த மீனா மன நிலை பாதிப்படைந்தார்.
நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் இருந்த பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மீனா தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.