உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூரில் கணவரை ஆட்கள் வைத்து தாக்கிய மனைவி

Published On 2023-07-12 10:29 IST   |   Update On 2023-07-12 10:29:00 IST
  • இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த கார்த்திக் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
  • 2 மர்ம நபர்கள் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது36). இவரது மனைவி சங்கீதா. கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த கார்த்திக் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் சங்கீதா கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற த்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக மனுத்தாக்கல் செய்து விட்டு சின்னமனூர் தேரடி பகுதிக்கு வந்தார். அப்போது சங்கீதா, அருண்குமார் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் 2 மர்ம நபர்கள் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறு விசாரணைக்கு ஆஜரா கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வராததால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுபடி சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News