உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தவர் யார்?
- நிலம் அளக்க முயன்ற போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
- போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்காடு:
ஏற்காடு காவல்நிலைய குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்றனர். நிலம் அளக்க முயன்ற போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களும் விசாரித்தனர்.இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர் ?என தெரியவில்லை இது குறித்து அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.