வேன் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
விழுப்புரம் அருகே இன்று காலை பழனி கோவிலுக்கு சென்று வந்தவேன் கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு:
- விழுப்புரம் அருகே இன்று காலை பழனி கோவிலுக்கு சென்று வந்த வேன் கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு:
- நிலை தடுமாறிய வேன் சாலை நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து..
சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனி கோயிலுக்கு தைப்பூச விழாவில் கலந்து கொள்ள ஒரு வேன் மூலம் பழனிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இந்த வேனை சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ் ஓட்டி வந்தார். வேனில், ஏழுமலை, கலியமூர்த்தி, சுலோச்சனா, அகிலா, ராஜேஷ், ரேவதி, உட்பட10 ஆண்கள் குழந்தைகள் உட்பட 12 பெண்கள், மொத்தம்22 பேர் பயணம் செய்தனர் வேன் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிறுத்தம் பகுதியில் இன்று அதிகாலை சென்றது அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது.
இதில் நிலை தடுமாறிய வேன் சாலை நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து வேன் கவிழ்ந்த இடம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சாலையில் கவிழ்ந்த வேனை போலீசார் அகற்றினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.