உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி டோல் பிளாசாவை தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய வாகனங்கள் எளிதாக கடந்து சென்ற காட்சி. 

தீபாவளி கொண்டாட சென்ற தென் மாவட்ட 45 ஆயிரம் வாகனங்கள்சென்னை திரும்பியதுவிக்கிரவாண்டி டோல்கேட்டில் 8 வழிகள் திறந்ததால் நெரிசல் இல்லை

Published On 2023-11-14 15:11 IST   |   Update On 2023-11-14 15:11:00 IST
  • விடுமுறைக்கு சென்ற வாகனங்கள்
  • ஒரே நாளில் 45 ஆயிரம்

விழுப்புரம்:

தென்மாவட்டங்களுக்கு விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் ஒரே நாளில் 45 ஆயிரம் வாகனங்கள் தலைநகர் திரும்பின. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையாட்டி கடந்த 10,11 தேதிகளில் தென்மாவட்டங்களுக்கு விடுமுறையை கொண்டாட சென்னை தலைநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து 1லட்சத்து 10ஆயிரம் வாகனங்களில் சென்றனர்.

நேற்று விடுமுறை முடிந்த நிலையில் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின.நேற்று மாலை 6.30 மணிவரை 28 ஆயிரம் வாகனங்களும், அதிகாலை 6மணி வரை 45 ஆயிரம் வாகனங்கள் டோல்கேட்டை கடந்தன.வாகனங்கள் அதிகமாக சென்னை நோக்கி சென்றதால் 8 வழிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் , டோல் பிளாசாவை நெரிசலின்றி எளிதாக கடந்தன.சாலையில் வாகனங்கள் அதிகரிக்க ஆரம்பித்ததால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News