ராயக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- நலத்திட்ட வழங்கும் விழா ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்தது.
- முடிவில் ஒன்றிய பொருளாளர் எஸ்.பி.முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக் ஒன்றிய செயலாளர் எம்.சின்னராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி, மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும்மான ஒய்.பிரகாஷ், மாவட்ட துணைச்செயலாளர் பி.முருகன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 1200 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் ஓசூர் மாநகர மேயர் எஸ்.எ.சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணைசெயலாளர் சின்னசாமி, கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
முன்னதாக நகர செயலாளர் நாகராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் எஸ்.பி.முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.